moviewingz

பிக்பாஸ் நிகழ்ச்சியா? வேண்டவே வேண்டாம்- ஒரே முடிவில் பிரபல நடிகை

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்ற ஆவலில் தமிழ்நாட்டு ரசிகர்கள் உள்ளனர். நிகழ்ச்சியும் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த நேரத்தில் சீசன் 2வில் இவர்கள் எல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்று நிறைய நடிகர்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன. தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் போவது குறித்து பேசியுள்ளார் நடிகை பிந்து மாதவி.

அவர் பேசும்போது, எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைய கற்றுக் கொடுத்தது. முதலில் தமிழ் பேசுவதற்கு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒருமுறை பிக்பாஸ் வீட்டிற்கு சென்றது போதும், சிறப்பு விருந்தினராக கூப்பிட்டால் போவேன் அவ்வளவுதான் என்றார்.


Share :


moviewingz