python sym.py python sym.py காதலியை தாக்கிவிட்டு தலைமறைவான பிரபல நடிகர்
moviewingz

காதலியை தாக்கிவிட்டு தலைமறைவான பிரபல நடிகர்

பிரபல பாலிவுட் நடிகர் அர்மான் கோலி தன் காதலியை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதாகும் அவர் Neeru Randhawa என்ற 35 வயது மாடலை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் Santacruz பகுதியில் ஒரு வீட்டில் ஒன்றாக 3 வருடங்கள் வாழ்ந்துவந்துள்ளனர். இருவருக்கும் ஜூன் 3ம் தேதி பணம் தொடர்பாக சண்டை வெடித்துள்ளது. அப்போது காதலியை கீழே பிடித்து தள்ளியுள்ளார் அர்மான் கோலி. பின் அவரின் தலைமுடியை பிடித்து தலையை தரையில் அடித்துள்ளார். அதனால் அவரின் தலை மற்றும் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. டிரைவர் தான் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீசில் Neeru Randhawa புகார் அளித்தபிறகு போலீசார் அர்மான் மாலிக்கை தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.

நேற்று அவர் புதிய சிம் கார்டு வாங்க வெளியில் வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தன் நண்பரின் பண்ணை வீட்டில் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.


Share :


moviewingz