python sym.py python sym.py டன் தலைவா... சூர்யாவிடம் கூறிய விஜய்
moviewingz

டன் தலைவா... சூர்யாவிடம் கூறிய விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு நல்ல படங்களையும் தயாரித்து வெளியிடுகிறார். இந்நிலையில் தற்போது அவர் தயாரிப்பில் அவரின் தம்பி கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படம் நாளை திரைக்கு வரவுள்ளது.

இந்த படம் தெலுங்கில் சின்னபாபு என்ற பெயரில் அதே நாளில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 3 நிமிட காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதை ட்விட்டரில் பகிர்ந்திருந்த அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகர் விஜய் தேவர்கொண்டா "எனக்கு பிடித்த நடிகர்கள் தயாரித்து நடித்த இந்தப் படத்தின் காட்சியை வெளியிடுவது மகிழ்ச்சி" என கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த சூர்யா "நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளையும் அதற்காக நீங்கள் கொடுக்கும் உழைப்பையும் நான் மதிக்கிறேன். விரைவில் சந்திப்போம்" என ட்விட்டினார்.

இந்த பதிலால் சர்ப்ரைஸ் ஆன விஜய் "டன் தலைவா... உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது" என கூறியுள்ளார்.




Share :


moviewingz