moviewingz

கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்

பிரஷாந்த் நீள் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கே.ஜி.எஃப் படத்தின் டிரைலரை வெளியிட்ட விஷால் இந்த படத்தின் தமிழ் பதிப்பை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

பிராஷாந்த் நீள் இயக்கத்தில் கன்னடத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் கே.ஜி.எஃப். ராக்கிங் ஸ்டார் யாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாகுபலி, 2.0 படங்களுக்கு பிறகு கே.ஜி.எஃப் படமும் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்றும், கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் பங்கேற்றனர்.

கன்னடத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலரை வெளியிட்ட விஷால் பேசும் போது,

இந்த படத்தின் மூலம் கன்னட சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாதிரியான ஒரு படத்தில் தானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறேன்.


Share :


moviewingz