moviewingz

ஆஸ்கரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய படம்! இந்த நல்ல படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா

உலகளவில் இந்திய சினிமாவுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்ததுண்டு. தமிழ் சினிமாவை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரு முறை ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவின் அஸ்ஸாமி சினிமா படமான் வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ் படம் பரிந்துரை செய்யப்பட்டது. ரீமா தாஸ் இயக்கிய இப்படம் ஏற்கனவே தேசிய விருது பெற்றுள்ளது.

அஸாம் மாநில அப்பாவி மக்களின் வாழ்க்கை, கடின உழைப்பு, இராமங்களோடு இணைந்துள்ளள சவால்கள், இயற்கை பேரிடர்கள் இவைகளுக்கிடையே சிறுமி ஒருவர் தன்னிடம் இருக்கும் கிட்டாரினை வைத்து வில்லேஜ் ராக்ஸ்டார் என்ற இசைக்குழுவினை அமைக்க முயற்சிப்பதே இப்படத்தின் கரு.

இந்நிலையில் அண்மையில் வெளியான 9 படங்களில் பட்டியலில் இப்படம் இடம் பெறாதது பலருக்கும் அதிர்ச்சியே. நார்வே படமான What will people say படத்தில் இந்திய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படமும் இந்த லிஸ்டில் இல்லையாம். இதுவும் ரசிகர்களுக்கு ஷாக் தான்.

மேலும் இதுவரை மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய இந்திய படங்கள் கடந்த வருடங்களில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செயப்பட்டன. இந்நிலையில் எந்தவொரு இந்திய படமும் விருது பெறாதது அதிர்ச்சியே.

ஜனவரி 22 வெளியாகும் இறுதி பட்டியல் தான் ஃபிப்ரவரி 24 ல் நடக்கும் விழாவில் பேசப்போகிறது.

பொறுத்திருப்போம் அதுவரை..


Share :


moviewingz