சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5.

நடிகர் & நடிகைகள் :- சிவா, மேகா ஆகாஷ், அன்ஜு குரியன், மனோ, KPY பாலா, MA.KA.PA ஆனந்த், திவ்யா கனேஷ், சாரா, மாதேஷ், பக்ஷ், கல்கி ராஜா, மொட்ட ராஜேந்திரன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விக்னேஷ் ஷா P.N.

ஒளிப்பதிவு :- ஆர்தர் அ வில்சன்.

படத்தொகுப்பு :- பூபதி செல்வராஜ்/ S.N. ஃபாஷில்.

இசை :- லியோன் ஜேம்ஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- லார்க் ஸ்டூடியோஸ்.

தயாரிப்பாளர்:- K.குமார்.

ரேட்டிங் :- 3. 5 / 5.

தமிழ் திரைப்பட உலகில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த வெற்றி பெற்ற ‘எந்திரன்’ திரைபடத்தையே மொபைல் டெக்னாலஜி வைத்து வந்த திரைப்படம்.

அந்த வரிசையில் இன்றைய மொபைல் அப்டேட் செய்து பெண் கதாபாத்திரத்தை வைத்து இந்த சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா.

முரட்டுசிங்கிள் பசங்க லவ் பண்ணுவதற்காக பிரத்யேகமாக ஸ்மார்ட்போனில் மட்டும் பேசக்கூடிய ஒரு பெண்னை விஞ்ஞான வளர்ச்சியில் பல கோடி ரூபாய் செலவில் ஷாரா கண்டுபிடிக்கிறார்.

இந்த ஸ்மார்ட்போன்
கண்டுபிடிப்புக்காக பகவதி பெருமாள் பல கோடி ரூபாயை விஞ்ஞானி ஷாராவுக்காக செலவு செய்கிறார்.

ஸ்மார்ட் போனில் பேசுவதற்காகவும் முரட்டுசிங்கிள் பசங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல நாட்களாக பல கோடி ரூபாய் செலவு செய்து பிறகு அந்த ஸ்மார்ட் போனுக்கு சிம்ரன் என்ற பெயர் வைத்து மேகா ஆகாஷ் என்ற ஒரு பெண்ணை ஸ்மார்ட் போன் வடிவில் கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி ஷாரா.

விஞ்ஞானி ஷாரா வடிவமைத்த சிம்ரன் என்ற ஸ்மார்ட் போனை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் போது அப்போது அங்கு வரும் இரண்டு திருடர்கள் அந்த ஸ்மார்ட் போனை சிம்ரன் திருடி சென்று விடுகின்றனர்.

அதன் பிறகு அந்த ஸ்மார்ட் போனை இரண்டு திருடர்கள் மொபைல் போன் விற்கும் கடையில் விற்றுவிடுகின்றனர்.

இதனிடையே இன்ஜினியரிங் படித்துவிட்டு ஃபுட் டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார் கதாநாயகன் சிவா.

கதாநாயகன் சிவா ஒரு கேம் விளையாடும் போது தோற்றுவிடுகிற காரணத்தால் தனது ஸ்மார்ட் போனை கோபத்தில் உடைத்து விடுகிறார்.

அப்பப்போ பண தேவைப்படும் போது அவருடைய நண்பர் மா.கா.பா.ஆனந்த்திடம் ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக பணம் வாங்கி கொண்டு மொபைல் வாங்க கடைக்கு செல்கிறார்.

கதாநாயகன் சிவா மலிவான விலையில் கதாநாயகன் சிவா ஸ்மார்ட் போன் கேக்க இவரிடம் அந்த சிம்ரன் ஸ்மார்ட் போனை கடைக்காரர் விற்றுவிடுகிறார்.

ஒருபுறம் தொலைந்த ஸ்மார்ட் போனை (சிம்ரன்) ஷாராவும், பகவதி பெருமாள் குழுவினர் தேடுகின்றனர்.

கதாநாயகன் சிவாவின் தேவைகளை அனைத்து காரியங்களையும் ஸ்மார்ட் போன் (சிம்ரன்) பூர்த்தி செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் ஸ்மார்ட் போன் (சிம்ரன்) கதாநாயகன் சிவாவை உயிருக்கு உயிராய் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.

இதனை ஏற்றுக்கொள்ளா முடியாத கதாநாயகன் சிவா வெறும் ஸ்மார்ட் போன் (சிம்ரன்) இருக்கும் உன்னால் உணர்வுகளை மட்டுமே கொடுக்க முடியும் என்னுடன் வாழமுடியாது என்று கூறி ஸ்மார்ட் போன் (சிம்ரனை) காதலிக்க மறுத்து விடுகிறார் கதாநாயகன் சிவா.

அதன் பிறகு கதாநாயகன் சிவா விரும்பும் பெண்ணையும் டெக்னாலஜியை வைத்து ஸ்மார்ட் போன் (சிம்ரன்) சேர்த்து வைக்கிறது.

அந்த பெண்னை காதலிக்க தொடங்கிய பிறகு சிம்ரனிடம் நெருக்கம் காட்டுவதை சிவா குறைத்துக் கொள்கிறார்.

இதனால் கோபமடையும் ஸ்மார்ட் போன் (சிம்ரன்) கதாநாயகன் சிவாவுக்கு எதிராக செயல்படுகிறார்.

இதனால் பல பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் கதாநாயகன் சிவா இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா? தொலைந்த போன (சிம்ரன்) ஸ்மார்ட் போனை கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் இந்த சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் திரைப்படத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகன் சிவாவின்
காமெடி கலந்த கவுண்டர் டயலாக் அடித்து ரசிகர்களின் கைத்தட்டல்கள் பெறுகிறார்

இவரின் எதார்த்தமான நடிப்பு திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

ஸ்மார்ட் போன் சிம்ரனாக வரும் மேகா ஆகாஷ் அழகாக வநது அற்புதமாக நடித்துள்ளார்.

திரையில் நடிப்பை வெளிப்படுத்த ஸ்கோப் இருக்கும் காட்சிகள் இல்லை என்றாலும் ஸ்மார்ட் போன் (சிம்ரன்) இந்த மாதிரியான கதாப்பாத்திரத்தை மேகா ஆகாஷ் தேர்வு செய்திருப்பது மிகப்பெரிய பாராட்டுக்கள்.

வேறு கதாநாயகிகள் இதுபோன்ற கதாப்பாத்திரத்தை தேர்வு செய்திருக்க தயங்கியிருப்பார்கள்.

அஞ்சு குரியன் அவருடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

அழகான நடிப்பின் மூலம் பாராட்டுக்களை பெறுகிறார்

விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாராவின நடிப்பு அருமை.

கதாநாயகன் சிவாவின் தந்தையாக வரும் பாடகர் மனோவின் நடிப்பு எஸ்பிபி ஞாபகப்படுத்துகிறது.

பாடகர் மனோவின் கதாப்பாத்திரத்தை மிகவும் அழகாக வடிவமைத்து இருக்கிறார்.

கதாநாயகன் சிவாவின் நண்பராக வரும் மா.கா.பா.ஆனந்த் அருமையாக நடித்திருக்கிறார்.

திவ்யா கணேஷ், பாலா, கல்கி ராஜா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் நடிப்பு திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் பாடல்கள் ஓகே, பின்னணி இசை திரைப்படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

வித்தியாசமான கதையை யோசித்து திரைக்கதை விறுவிறுப்பாக இருப்பதாலும் காமெடி பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ளதாலும் திரைப்படத்தை ரசிக்க வைத்திருப்பது இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் மிகப்பெரிய பாராட்டுக்கள்.

திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே, இதில் லாஜிக்கல் விஷயங்களை எதிர்பார்க்காதீர்கள் என்று டைட்டில் கார்ட் போட்டு விடுகிறார்கள்.

இதனாலேயே திரைப்படம் முழுவதும் லாஜிக் இல்லாமலே இருக்கிறது.

மொத்தத்தில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படம் – குடும்பத்துடனும் குழந்தை குட்டிகளுடன் இந்தப் படத்தை குதூகலமாக பார்த்து சிரிக்கலாம் ரசிக்கலாம்.