ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் இனைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்ஃபுல் 4.அக்டோபர் 25 முதல் வெளியாக உள்ளது. !
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் இனைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்ஃபுல் 4. ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கிய நகைச்சுவைத் திரைப்படமான இது ஹவுஸ்ஃபுல் ஃபிரான்சிஸின் நான்காவது பகுதியாகும். அக்ஷய் குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல், கிருதி சனோன், பூஜா ஹெக்டே மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
படத்தின் பாடல்களை சோஹைல் சென், ஃபர்ஹாத் சாம்ஜி, சந்தீப் ஷிரோத்கர் மற்றும் பஞ்சாபி ஹிட் ஸ்குவாட் ஆகியோரும் பின்னணி இசையை ஜூலியஸ் பாக்கியமும் கையாண்டுள்ளனர். முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டுங்கை சுதீப் சாட்டர்ஜி மற்றும் ராமேஸ்வர் எஸ். பகத் கையாண்டுள்ளனர்.
1419 சகாப்தத்தில் சதி மற்றும் பழிவாங்கல் காரணமாக 6 காதலர்கள் பிரிந்து, 2019 இல் மீண்டும் சந்திக்கின்றனர். இருப்பினும், தற்போதைய வாழ்க்கையில் 3 கதயகர்கள் தங்களின் மற்ற மூவரையும் மாறி மணக்கின்றனர், திருமணத்திற்கான நேரத்தில் இவர்களின் கடந்த கால வாழ்க்கையை நினைவில் கொள்வார்களா அல்லது தவறான காதலர்களுடன் என்றென்றும் மாட்டிக்கொள்வார்களா? என்பது கதை. ஹவுஸ்ஃபுல் 4 உங்களை 1419 ஆம் ஆண்டின் கதையை 2019 வரை அழைத்துச் செல்கிறது.