அக்சய்குமாரும் – பிரபாசும் மோதிக்கொள்வார்களா?

பாகுபலி நாயகன் பிரபாஸ் தற்போது நடித்துள்ள படம் சாஹோ. இந்த படத்தில் அவருடன் ஸ்ரத்தாகபூர், நீல்நிதின் முகேஷ், அருண்விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சுஜீத் இயக்கியுள்ள இந்தபடம் ஆகஸ்ட் 15-ந்தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஹிந்தியில் அக்சய்குமார், வித்யாபாலன், டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் மங்கள் படத்தையும் ஆகஸ்ட் 15-ந்தேதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரபாஸின் சாஹோ ஆகஸ்ட் 15-ந்தேதி ரிலீஸ் என்று முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதால் அதே தேதியில் ஹிந்தியிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்து விட்டனர்.
அதனால் ஒரேநாளில் இரண்டு மெகா படங்களும் மோதினால் வசூல் பாதிக்கும் என்று அக்சய்குமாரின் மிஷன் மங்கள் படத்தை ஒரு வாரத்திற்கு முன்னதாக, அதாவது ஆகஸ்ட் 9 -ந்தேதியே வெளியிடுமாறு ஹிந்தி சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாம்.
இதுகுறித்து இன்னும் மிஷன்மங்கள் படக்குழு அறிவிப்பை வெளியிடாதபோதும், ஆகஸ்ட் 9-ந்தேதியில் படத்தை வெளியிட சம்மதம் தெரிவித்து விடுவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.