அக்னிச் சிறகுகள்’ திரைப்படத்தில் நடிகை அக்சரா ஹாசனின் கதாபாத்திரம் குறித்த தகவல் *

நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் ஆக்‌ஷன், சேஸிங் பயணமாக உருவாகி வருகிறது. மேலும் இந்தப் படத்தின் கதை இஸ்தான்புல் பகுதியில் துவங்கி நார்வே மலைப்பகுதிகளில் முடிகிறது இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை அக்சரா ஹாசன் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.