அசுரகுரு  ட்ரெய்லர் வெளியீட்டு விழா இது எதோ உள்குத்து மாதிரி இருக்கே”? இயக்குனர் பாக்யராஜ்

அசுரகுரு  ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது விழாவில் இயக்குனர் பாக்யராஜ் அவர் பேசும்போது

இந்த விக்ரம்பிரவுக்கு மட்டும் இன்னும் ஏன்பா ஒன்னும் நடக்க மாட்டேங்குது”என்ற குரல் பரவலாக கேட்கத் துவங்கி விட்டது..பெரிதாக உழைக்கிறார். ஆனால் சிறிதாகத் தான் ஜெயிக்கிறார் என்று அவரது சுற்றம் சகிதம் ஆதங்கப்பட்டு வருகிறது. கடைசியாக வெளியான துப்பாக்கி முனை ஓரளவு வெற்றியைப் பெற்றிருந்தாலும். இன்னும் கும்கி போல பெரிய ஹிட்டு அமையவில்லையே என்ற வருத்தம் பலரிடம் இருக்கிறது.

அந்தக் குறையை அசுரகுரு படம் போக்கும் என்கிறார்கள் படத்தின் பங்களிப்பார்கள். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாக்கியராஜ், ” சினிமாவில் தான் வாரிசுகள் ஜெயிக்க ரொம்ப போராட வேண்டிய இருக்கு. அரசியல்ல ஈசியா வந்திடுறாங்க” என்றார். “இது எதோ உள்குத்து மாதிரி இருக்கே”? என்று கேட்டதற்கு, “அப்படியெல்லாம் இல்லங்க. என் பையன் பாண்டியராஜன் பையன், இதோ விக்ரம்பிரபு எல்லாம் போராடிக்கிட்டு இருக்காங்க இல்லியா அதைத்தான் சொன்னேன்” என்றார். படத்தின் ட்ரைலர் பாடல்கள் நன்றாக இருப்பதால் படம் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அசுரகுரு பெருசா ஜெயிக்கட்டும்! விக்ரம் பிரபு மஹிமா நம்பியார் நடிக்கும் இப்படத்தை ராஜ்தீப் இயக்கி இருக்கிறார்