அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் புதிய தகவல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.

இந்த படத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.