அஜித் விஜய் ஒரே படத்தில் இயக்க ஆசைப்படும் பாகுபலி சண்டை பயிற்சி கலைஞர்

1990களில் விஜய் மற்றும் அஜித் இருவரும் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் இணைந்து நடித்தனர்.

தற்போது இருவருக்கும் தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எனவே அவர்களை இணைத்து ஒரு படத்தை இயக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த 25 வருடங்களாக எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

இந்த நிலையில் பாகுபலி, விஸ்வரூபம், எக்ஸ்மென் உள்ளிட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய லீ விட்டேகர் என்பவர் இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அஜித் விஜய் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் இணைந்து நடித்தால் இது ரசிகர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைய வாய்ப்பு வரலாம்.
தல தளபதி பரிசீலனை செய்வார்களா..?