‘அண்ணாத்த’ துரத்தும் கொரானா வைரஸ்சூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய படக்குழுவினர்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த.
ரஜினிகாந்துடன் நடிகைகள் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
அடுத்தக்கட்டமாக புனே மற்றும் கொல்கத்தா செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் வட இந்தியாவில் கொரானா வைரஸ் பீதி அதிகமாக இருப்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் அந்த பகுதிக்கு செல்லும் திட்டத்தை கை விட்டார் அண்ணாத்த. படக்குழுவினர்
இதனால் படப்பிடிப்பு தொடர்ந்து ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே நடைபெற உள்ளதாம்.
எனவே அதற்கான செட் வேலைகள் தற்போது நடந்து வருகிறதாம்.