அதர்வாவின் ‘100’ படம் இன்று வெளியாகவில்லை வருத்தத்தில் படக்குழுவினர்

அதர்வாவின் ‘100’ படம் 

இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் ‘100’. இந்த படத்தில் நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். இந்த படம் கடந்த 3ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் மே 9ம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென இந்த படத்தின் திரையிடும் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு முன்பதிவு செய்தவர்களுக்கு, 10 நாட்களில் பணம் திருப்பி வழங்கப்படும் என குறுஞ்செய்தி தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.