அதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் – ஜி.வி.பிரகாஷ் விளக்கம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் இசைமயப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ். இவர் தனது படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனிடையே இவர் அதிகமாக சம்பளம் கேட்டதாக சமீபத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் இதற்கு தற்போது ஜி.வி.பிரகாஷ் விளக்கமளித்துள்ளார். அதில் “நான் இசையமைத்த நடித்த பெரும்பாலான நிறுவனங்களுடன் தொடர்ந்து பணிபுரிந்துள்ளேன். பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்தால் இந்த அளவிற்கு பணிபுரிந்து இருக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.