அதிரடி ஆக்சன் கதாநாயகியாக களமிறங்கும் பிரபல நடிகை ‼*

மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இதனை தொடர்ந்து கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாஃபியா’ படத்தில் நடிகர் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் முதன்முறையாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ப்ரியா பவானி ஷங்கர் ‘இந்தியன் 2’ மற்றும் ‘பொம்மை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.