அதுல்யாவை பின் தொடர்பவர்கள் இவ்வளவு பேரா?

காதல் கண் கட்டுதே, ஏமாலி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியுள்ளது.

சாட்டை 2’, ‘நாடோடிகள் 2’ என வரிசையாக ஐந்து படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் அதுல்யா ரவி. அதே நேரம் டுவிட்டரிலும் பிசியாக இருக்கிறார். `காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர். அதன் பிறகு `ஏமாலி’ என்கிற படத்தின் வாயிலாக சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். 

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வீடியோக்கள், புகைப்படங்கள் என பகிர்ந்து வருவார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

இது குறித்து தனது பக்கத்தில், ‘’எனக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அன்பு, ஆதரவை தவிர பெரியது வேறு எதுவும் இல்லை. எனக்கு ஆதரவு மற்றும் அன்பை அளித்த அனைவருக்கும் நன்றிகள்’’ என தெரிவித்துள்ளார்.