அனபெல் சேதுபதி திரை விமர்சனம் ரேட்டிங் –2.75 /5
நடிகர் நடிகைகள் – விஜய் சேதுபதி, யோகி பாபு, ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், சேத்தன், சுப்பு பஞ்சு, ராஜா சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியான், ராஜ்குமார், சுனில், லிங்கா டாப்ஸி பெண்ணு, ராதிகா சரத்குமார், வெண்ணிலா கிஷோர், தேவதர்ஷினி, மதுமிதா, சுரேகா வாணி, ஹர்ஷிதா, இந்து ரவி, பேபி உத்ரா, மாஸ்டர் யுவனேஷ், மாஸ்டர்அஸ்வின்,
மற்றும் பலர்.
தயாரிப்பு – பேஷன் ஸ்டுடியோஸ்.
இயக்கம் – தீபக் சுந்தர்ராஜன்.
ஒளிப்பதிவு – கௌதம் ஜார்ஜ்.
படத்தொகுப்பு – பிரதீப் இராகவ்.
இசை – கிருஷ்ண கிஷோர்
(ஓடிடி) திரைப்படம் வெளியான தேதி – 17 செப்டம்பர் 2021
ரேட்டிங் –2.75 /5
பேய் திரைப்படங்கள் என்றால் திரைப்படம் பார்க்கும் நம்மளை பயமுறுத்த வேண்டும்.
காமெடி திரைப்படம் என்றால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும்.
தமிழ் திரைப்பட உலகில் எவ்வளவோ பேய் திரைப்படங்கள் வந்திருக்கிறது.
காஞ்சனா 1 2 3 திரைப்படம் பார்க்க முடியவில்லை பயன்படுத்தி இருப்பார்கள் காமெடி நடிகர் சிரிக்க வைத்து இருப்பார்கள்
நமது இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை.
அந்த அரண்மனையில் ஏகப்பட்ட ஆவிகள் வசிக்கின்றன.
அங்கு பௌர்ணமி தினத்தில் யார் தங்கினாலும் இறந்து விடுகிறார்கள் இறந்தவர்கள் ஆவியாகிவிடுகிறார்கள்.
அந்த அரண்மனையில் கதாநாயகி டாப்சி தனது குடும்பத்தினருடன் வந்து தங்குகிறார்.
அதன் பிறகு வரும் பௌர்ணமி தினத்தில் கதாநாயகி டாப்சிக்கு என்ன ஆனது?
அரண்மனையில் வசிக்கும் பேய்கள் ஏன் வெளியேற முடியவில்லை, அரண்மனையின் பின்னால் உள்ள மர்மம் என்ன? என்பதே இந்த அன்பெல் சேதுபதி திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, 1940 களின் பின்னணியில் வரும் காட்சிகள் மட்டுமே வருகிறார்.
சுதந்திர வாங்கும்முன் உள்ள காலத்திற்கு முந்தைய ராஜாவான கதாநாயகன் விஜய் சேதுபதி, லண்டனிலிருந்து வந்த வெள்ளைக்காரப் பெண்ணான கதாநாயகி டாப்ஸீயைப் பார்த்ததுமே காதல் வந்துவிடுகிறது.
கதாநாயகி டாப்ஸீயும் அவர் மீது காதலில் விழுகிறார்.
கண்டதும் காதல் திரைப்படங்கள் மட்டுமே நடக்கிறது.
தனது காதலிக்காக பிரம்மாண்டமான மாளிகை ஒன்றைக் கட்டுகிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி திருமணத்திற்குப் பின்பு அதில் குடியேறுகிறார்கள்.
தம்பதியினர் இருவரும் அழகிய மாளிகையில் குடியேறுகிறார்.
அந்த மாளிகையைப் பார்த்து பொறாமைப்படும் ஜமீன்தார் ஜெகபதிபாபு அந்த மாளிகையை எப்படியாவது அடைய நினைக்கிறார்.
கதாநாயகன் விஜய் சேதுபதியிடம் கேட்டும் அதைத் தர மறுக்கிறார்.
கதாநாயகன் விஜய் சேதுபதி.
கதாநாயகி டாப்ஸீ கர்ப்பமடைந்த நிலையில் அவருக்கும் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கும் விஷம் வைத்துக் கொன்று அந்த மாளிகையை அடைகிறார்
ஜமீன்தார் ஜெகபதிபாபு.
தனது ராஜாவான கதாநாயகன் விஜய் சேதுபதியை விஷம் வைத்து கொலை செய்த ஜமீன்தார் ஜெகபதிபாபு
பழி வாங்கத் துடித்த அவரது உதவியாளர் யோகி பாபு சாப்பாட்டில் விஷம் வைத்து ஜமீன்தார் ஜெகபதிபாபு குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுகிறார்.
இடைவேளை வரை திரைப்படத்தின் கதாநாயகன் யோகி பாபு தான்.
இப்போதைய டிரெண்டில் இருக்கும் யோகி பாபுக்குப் பொருத்தமாக பல நகைச்சுவைக் காட்சிகளை, வசனங்களைச் சேர்த்து முதல் பாதியை இன்னும் கலகலப்பாகக் கொண்டு போயிருக்கலாம்.
இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் சிறு குழந்தைகள் ரசிக்கும் அளவிலான காமெடிகளை மட்டுமே யோசித்திருக்கிறார்.
வீர சேதுபதியாக கதாநாயகன் விஜய் சேதுபதியும், அனபெல் ஆக கதாநாயகி டாப்ஸீயும் அவ்வளவு ரசித்து நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கிருஷ்ணா கிஷோர் பாடல்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இரண்டு சூப்பர் ஹிட்களையாவது கொடுத்திருந்தால் திரைப்படத்திற்கு பேருதவியாக இருந்திருக்கும்.
பின்னணி இசையில் சமாளித்துள்ளார்.
கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு அரண்மனையை பல விதமான கோணங்களில் அழகழகாய் காட்டியிருக்கிறார்.
அனபெல் கதாநாயகி டாப்ஸீயை அழகாகக் காட்டுவதில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ்.
அழகான அரண்மனையும், பிளாஷ்பேக் கதாநாயகன் விஜய் சேதுபதி, கதாநாயகி டாப்ஸீ, யோகிபாபு ஆகியோருக்காக கொஞ்சம் ரசிக்கலாம்.
ஒரு சில காட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கிறது.
மற்ற காட்சிகளிலும் இயக்குனர் ரசிக்கும்படியாக காட்டியிருந்தால் பொறுமையாக இந்த அனபெல் சேதுபதியை ரசித்திருக்கலாம்.
அனபெல் சேதுபதி – காமெடி நடிகர்கள் இருந்தும் காமெடி இல்லாத திரைப்படம்…