அனிருத் இசையில் தளபதி 64 & ரிலீஸ் அறிவிப்பு வெளியானது
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படம் விஜய்யின் 63வது படமாகும்.
இதனையடுத்து அவரது 64 படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக முன்பே தெரிவித்திருந்தோம்.
அதன்படி தற்போது முறையான அறிவிப்பும் வெளியானது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் என மிகவும் வலுவான படக்குழு இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
2019 அக்டோபரில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.
அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட உள்ளனர்.