அனைவராலும் எதிர்பார்த்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் டைட்டில் இதோ! மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் திரை உலகில் எப்போதும் பிசியாக இருக்கும் நடிகர். அதிக படங்களில் ஹீரோவாக நடித்து வரும் இவர் தற்போது தெலுங்கு சினிமா பக்கமும் சென்றுவருகிறார்.

மற்ற நடிகர்களின் படங்களில் அழுத்தமான வேடங்கள் கிடைத்தாலும் அதையும் ஏற்று நடித்து வருகிறார். இது அவருக்கு பெரும் பலமாய் அமைந்துள்ளது.

அதே வேளையில் டிவி நிகழ்ச்சியிலும் இப்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகிவிட்டார். அந்த வகையில் அவர் அடுத்ததாக இயக்குனர் விஜய் சந்தரின் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு சங்கதமிழன் என்ற டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள்.