அனைவரின் பேரன்புக்கும், பேராதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி – நடிகர் சூர்யா

புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு தொடர்பாக சமீபத்தில் நடிகர் சூர்யா பல கருத்துக்கள் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து சூர்யா மீது பாஜக தலைவர்கள் விமர்சனம் வைத்தனர். எனினும், சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில், நடிகர் சூர்யா மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது” என்று கூறியுள்ளார்.

சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையின் இணைப்பு

https://twitter.com/Suriya_offl/status/1152390150090973184?s=19