அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் எஸ் எழில் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்.

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது நம்ம ஆளும் காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன்’I உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறார்.
முதல் படமாக ‘சொல்லாமலே’ துவங்கி, ‘பிச்சைகாரன்’ வரை பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி வி பிரகாஷ் குமார் நடிக்க ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.

இதை தொடர்ந்து அபிஷேக் பிலிம்ஸ், தற்போது ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் ஒரு திகில் படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ போன்ற வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் எழில், இந்த முறை ஒரு வித்தியாசமான திகில் கதையை, அவருக்கே உரிய பாணியில் வித்தியாசமான முறையில் படைத்திருக்கிறார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு, வெளி நாட்டில் பேய் பிடித்த நபரிடம் இருந்து, பேயை விரட்ட வேண்டும் என்ற சவாலான வேலை வருகிறது. அந்த சவாலான வேலையை ஏற்றுக்கொண்ட ஹீரோ, பேயை விரட்டி அந்த நபரை காப்பாற்றினாரா, இல்லையா என்பதே இப்படத்தின்  கதை.

இந்த திகில் படத்தை, மிகவும் ஜனரஞ்சகமாக தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்து, மிகவும் சுவராஸ்யமாக படைத்திருக்கிறார் இயக்குனர் எழில்.

யூ கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோபி கிருஷ்ணா கவனித்திருக்கிறார்.

சத்யா இசையமைக்க, யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

கதை, வசனம் எ முருகன் எழுத, இயக்குனர் எழில் திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தை, அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரித்து இருக்கிறார். 

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப வல்லுனர்களும்:
ஜி வி பிரகாஷ்
ஈஷா ரெப்பா
சதீஷ்
ஆனந்தராஜ்
சம்ஸ் 
நிகிஷா படேல்
சாக்ஷி அகர்வால்
கோவை சரளா
மதுமிதா
நான் கடவுள் ராஜேந்திரன்
ஆடுகளம் நரேன்
வையாபுரி
வெண்பா
மனோபாலா
சித்ரா லக்ஷ்மணன்
தயாரிப்பு: அபிஷேக் பிலிம்ஸ்’ ரமேஷ் பி பிள்ளை
ஒளிப்பதிவு: யூ கே செந்தில் குமார்
படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா
இசை: சத்யா
பாடல்கள்: யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ்
சண்டைபயிற்சி: ‘கனல்’ கண்ணன்
கலை: எம். யூ. ஜெயராமன்
காஸ்ட்யூம்: சண்முக பிரியா
நடனம்: தினேஷ், தினா
கதை & வசனம்: எ. முருகன்
திரைக்கதை, இயக்கம்: எஸ். எழில்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்