அமமுகவில் இருந்து விலக பிரபல நடிகர் முடிவு

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விளக்கினார். பின்னர் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இந்நிலையில் மனக்கசப்பு காரணமாக தற்போது அமமுகவில் இருந்து விலக நடிகர் ரஞ்சித் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக நிர்வாகிகள் அவரை அடிக்கடி தொடர்பு கொண்டு தங்கள் கட்சியில் இணைய வலியுறுத்துவதாகவும் விரைவில் அவர் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.