அமிதாப் பச்சன் ஜோடியாக களமிறங்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ நடிகை

‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் ‘உயர்ந்த உள்ளம்’ எனும் படம் தயாராகிவருகிறது. இந்த படத்தில் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.