அமேசான் ஒரிஜினல் தொடரான மிர்சாபூரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சீசனுக்கான வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியிருக்கிறது.

அமேசான் ப்ரைம் வீடியோ, எக்செல் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் இணைந்து *அமேசான் ஒரிஜினல் தொடரான மிர்சாபூரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சீசனுக்கான வெளியீட்டு தேதியை (தேதி) உறுதிப்படுத்தியிருக்கிறது

பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவ்யேண்டு, ஸ்வேதா திரிபாதி சர்மா, ரசிகா துகல் மற்றும் ஹர்ஷிதா சேகர் கவுர் போன்ற பல பிரபலமான நடிகர்கள் மிர்ஸாப்பூரின் இருண்ட மற்றும் தீவிரமான உலகிற்கு உங்களை அழைத்து செல்வார்கள்.

மிர்சாபூர் சீசன் 2 அமேசான் ப்ரைம் வீடியோவில் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும்.

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப்காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல். பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில்.

மும்பை, இந்தியா, (தேதி): அமேசான் ப்ரைம் வீடியோ தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடரான மிர்சாபூரின் இரண்டாவது சீசன் (தேதி) அன்று தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. க்ரைம் நாடகத்தின் சீசன் 1, வட இந்தியாவின் தொலைதூர பகுதியான மிர்சாபூரில் அமைக்கப்பட்டு பார்வையாளர்களை துப்பாக்கிகள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமான இருண்ட, சிக்கலான உலகத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. இதன் கதையின் வேகம், நன்கு அமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் நுணுக்கமான கதையம்சம் ஆகியவை பார்வையாளர்களை இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைத்தது. சீசன் 2 உடன், மிர்சாபூரின் கதைக்களம் பெரிதாகிறது, ஆனால் விதிகள் அதேதான்! பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவேண்டு, ஸ்வேதா திரிபாதி சர்மா, ரசிகா துகல், ஹர்ஷிதா சேகர் கவுர், அமித் சியால், அஞ்சும் ஷர்மா, ஷீபா சத்தா, மனு ரிஷி சதா மற்றும் ராஜேஷ் தைலாங் ஆகிய நட்சத்திர குழு நடிகர்கள், அதிரடியான தொடரில் திரும்ப வருகிறார்கள். ஸ்டைலான, குற்றங்கள், போதைப்பொருள் நிறைந்த, வன்முறை ஆட்சி நடக்கும் மற்றும் உயிர்வாழ போராட வேண்டிய உலகத்திற்குள் செல்ல தயாராகுங்கள். தொடரின் அடுத்த பாகத்தில் விஜய் வர்மா, பிரியான்ஷு பெயினுலி, இஷா தல்வார் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினலின் இந்த தொடர் எக்செல் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்படுகிறது மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் வெளியிடப்படும்.

இந்த முக்கியமான அறிவிப்பைப் பற்றி பேசிய அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் கருத்து தெரிவிக்கையில், “மிர்சாபூர் உண்மையிலேயே எங்களிடம் தாக்கத்தை கொண்டு வந்த தொடர். இந்த நிகழ்ச்சி இந்திய பார்வையாளர்களுக்கு கதை சொல்லும் விதத்தில் ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்தியது – அதன் கதாபாத்திரங்கள் பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சீசன் 2-ன் விறுவிறுப்பான கதை நம் பார்வையாளர்களை மீண்டும் மெய்மறக்க வைக்கும் என்று நம்புகிறோம். ”

“எங்களுக்கு கிடைக்கும் இந்த அதிக அளவிலான அன்பு, எக்செல் என்டர்டெயின்மென்டை இன்னும் பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த கருத்துக்களைக் கொண்ட நிகழ்ச்சிகளைத் தர ஊக்குவிக்கிறது” என்று எக்செல் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி கூறினார். “அந்த முயற்சியின் ஒரு படி தான் மிர்சாபூர். பார்வையாளர்களுக்காக கட்டுப்பாட்டுகளை மீறுவது மட்டுமல்ல, படைப்பாளர்களாக நமது எல்லைகளையும் அதிகப்படுத்துகிறது. நம்பகத்தன்மையை இழக்காமல் இந்தியாவின் உள்நாட்டிலிருந்து விறுவிறுப்பான மற்றும் சொல்லப்படாத கதைகளை கொண்டு வருவது எங்கள் மிகப்பெரிய வெற்றியாகும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மிர்சாபூரின் சீசன் ஒன்று பெற்ற அனைத்து பாராட்டுகளும் மனதைக் கவரும் விதமாக உள்ளது. இது நிகழ்ச்சியின் இரண்டாவது

“நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து கிடைத்த அன்பும் பாராட்டும் மிகப்பெரியது. இதை முக்கியமாக எடுத்துக் கொண்டு, அதன் அடுத்த பாகத்தில் பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்தளிக்க இருக்கிறோம் ”என்றார் படைப்பாளர் புனீத் கிருஷ்ணா. ” 2 – ஆம் சீசனுக்கான அவர்களின் உற்சாகத்தைப் பார்த்த நாங்கள், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமளவிற்கு ஒவ்வொருவரும் எங்களது ஒத்துழைப்பை வழங்குவோம். மிக நீண்ட காலமாக காத்திருக்கும் ரசிகர்களை மிர்சாபூரின் மற்றொரு மாறுபட்ட உலகத்திற்கு அழைத்துச் செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ”

புனீத் கிருஷ்ணா, குர்மீத் சிங் மற்றும் மிஹிர் தேசாய் ஆகியோரின் இயக்கத்தில் இந்த தொடரை எக்செல் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது,