அரசியலுக்கு அடித்தளம் போடுகிறார் விஜய்… 2026ல் களமிறங்க திட்டம்??

தமிழ் சினிமாவிற்கும் தமிழக அரசியலுக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கலைஞரிடம் ஆரம்பித்து எம் ஜி ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சீமான், கமலஹாசன் என அனைவரும் தமிழ் சினிமாவின் மூலமாக கால் பதித்து அரசியலில் சாதனை புரிந்தவர்கள் தான்.

அந்த வரிசையில் 2021 சட்டசபை தேர்தல் தனது இலக்கு என்று கூறிய ரஜினியின் அரசியல் பிரவேசத்தையும் மக்கள் உற்று நோக்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் தளபதி விஜய். இவரும் விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தின் மூலம் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அட்லீயின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய், கிடைக்கும் நாட்களில் தனது இயக்க மாவட்ட தலைவர்களை அழைத்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறாராம்.

இந்த சந்திப்பு அடையாறில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்மெண்ட் வேலைகளை இப்போதே ஆரம்பித்து விடுங்கள், காலம் வரும் என்று கூறி வருகிறாராம் விஜய்.

2021 அரசியல் முடிவுகளை பார்த்து 2026ல் முழுவீச்சில் அரசியலில் இறங்கி விடவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை இப்போதே செய்ய ஆரம்பித்துவிட்டாராம்.

எது எப்படியோ மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு..