அரசியல்வாதிகள் அனைவரும் திரைத்துறையினரை பார்த்து பயப்படுகிறார்கள் – பிரபல இயக்குநர்

திரைப்படங்களை சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இணையத்தில் பதிவேற்றப்படுவதை தடுப்பதற்காக விழிப்புணர்வு படம் ஒன்று உருவாகிவருகிறது.

இதில் இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, கே.ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடும் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில் “அரசியல்வாதிகளுக்கு சினிமாக்காரர்களை பார்த்து பயம். எங்கே நம்ம இடத்துக்கு இவர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயம். பைரசி இணையதளத்துக்கு அரசியல்வாதிகள் தான் ஏஜெண்டாக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அரசியலில் நல்லவர்கள் இப்போது இல்லை” என அவர் பேசினார். இது குறித்து அவர் பேசிய காணொளி இணைப்பு