அருள்நிதிக்கு ஜோடியாகும் நடிகை அஞ்சலி

இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கும் “கே 13′ என்ற படத்தில் நடிகர் அருள்நிதி நடித்துவருகிறார். இந்த படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  நடிகர் அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார் தகவல் வெளியாகியுள்ளது. கிராமத்து பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்கவுள்ளது.