அரையிறுதியில் பங்கேற்ற அணிகள் வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து

14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பம் வரைந்துள்ளார்.

அந்த சிற்பத்தில் உலக கோப்பை போட்டிகளில் மோதவுள்ள அணிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர் 4 நாடுகளின் கொடிகளை வரைந்து வாழ்த்தியுள்ளார்.