அறம் 2 திரைப்படத்தில் நயன்தாரா பதில் கீர்த்தி சுரேஷ்? இயக்குனர் கோபி நயினார்.
இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த திரைப்படம் ‘அறம்’
கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் வெளியாகி இந்த திரைப்படம் மிக பெரிய சூப்பர் ஹிட்டானது.
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை காப்பாற்றும் மதிவதனி ஐ.ஏ.எஸ். ஆக நடித்திருந்தார் நடிகை நயன்தாரா.
அவரின் நடிப்பை அனைவரும் பாராட்டி இருந்தனர்.
இதன் பின்னர் 2ஆம் பாகத்தை இயக்க முடிவு செய்திருந்தார் இயக்குனர் கோபி நயினார்.
ஆனால் நடிகை நயன்தாரா அறம் 2 திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
இந்த நிலையில் அறம் 2 திரைப்படத்தில் கலெக்டராக நடிக்குமாறு இயக்குனர் கோபி நயினார் நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியாத தகவல்கள் வந்தன.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என கோபி நயினார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது கீர்த்திசுரேஷ் வசம் 2 திரைப்படங்களே கை வசம் உள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த & பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் சர்கார் வாரி பாட்டா ஆகிய 2 திரைப்படங்களில் நடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ்.











