அவருக்கு ’எதிராக சாட்சி சொல்ல பயப்படுகின்றனர் – பிரபல நடிகை

மீடு’ இயக்கம் கடந்த ஆண்டு உலகில் உள்ள அத்துணை துறைகளையும் புரட்டி எடுத்தது. பல முக்கிய பிரமுகர்கள், நடிகர் எல்லாம் இதில் சிக்கினர். பலர் சமூகவலைதளஙகளில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நிகழ்வுகளும் நடந்தன.

இந்திய சினிமாவில் மீடு இயக்கம் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் முக்கியமாக பிரபல நடிகர் நானே படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார். இது பெரும் பரபரபை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இப்புகாரின் அடிப்படையில் நானே படேகர் மற்றும் டைரக்டர்,தயாரிப்பாளர் , நடன இயக்குநர் ஆகியோர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் புகாருக்கு மறுப்பு தெரிவித்த நானே படேகர் தனுஸ்ரீ தத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.அதன்பிறகு இவ்வழக்கில் படேகர் குற்றமற்றவர் என்று செய்திகள் வெளியானது.

ஆனால் இது வெறும் வதந்தி என்று கூறிய தனுஸ்ரீ தத்தா , விசாரணை நடைபெற்றுவருவதை உறுதிசெய்தார். மேலும் எஃப்.ஐ .ஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை 1 அல்லது 2 பேர் மட்டும்தான் வாக்குமூலம் அளித்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இன்னும் சாட்சி  சொல்ல வரவில்லை .அவர்கள் சாட்சி சொல்ல பயப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.