‘அவெஞ்சர்ஸ்’ கிளைமேக்ஸ் காட்சிக்கு உதவிய ரஜினிகாந்த்

”அவெஞ்சர்ஸ்’ படத்தின் 4ம் பாகமாக ‘அவென்சர்ஸ் எண்ட் கேம்’ என்ற படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகவுள்ளது. பல சூப்பர் நாயகன்களை ஒன்றிணைக்கும் இந்த படம், இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்த இந்திய வந்துள்ள இந்த படத்தின் இயக்குனர்களின் ஒருவரான ஜோ ரஸ்ஸோ ‘அவெஞ்சர்ஸ்’ படம் குறித்து கூறியதாவது “ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படத்தைப் பார்த்து ‘அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆப் அல்ட்ரான்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வடிவமைக்கப்பட்து. ஆனால் படத்தின் நீளம் கருதி அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.