ஆகஸ்ட் 23 ம் தேதி வெளியாகிறது “ கடமான் பாறை “ 

மன்சூரலிகான்  தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும்  படம்  “ கடமான்பாறை “

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு  முக்கிய வேடத்தில்  நடிக்கிறார்.  கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.                
ஒளிப்பதிவு            –       T.மகேஷ்.
இசை                     –       ரவிவர்மா    பாடல்கள்     –       விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன் , மன்சூரலிகான்.

வசனம்         –       R.துரை

கலை            –       ஜெயகுமார்
நடனம்         –       டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், பம்மல் சந்துரு.                                                      ஸ்டன்ட்       –       ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம்       –        J.அன்வர்                                
ஒருங்கிணைப்பு              –        ஜே,ஜெயகுமார் 
கதை, திரைக்கதை, தயாரிப்பு இயக்கம்   –  மன்சூரலிகான்.  

 படம் பற்றி மன்சூரலிகான் கூறியதாவது…

நகைச்சுவை கலைந்த திரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி இருக்கிறது. மாடர்ன் டெக்னாலஜி இன்று மாணவர்களை எப்படி தவாறன பாதைக்கு அழைத்துச் செல்கிறது, அதனால் இளைஞர்கள் எவ்வாறு வாழ்கையில் தடம் மாறுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படம் இம்மாதம் 23 ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.