ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா நடிக்கிறார்.

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார்.பிக் பாஸ் சீசன் 1ல் எப்படி ஓவியாவிற்க்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததோ அதேபோல் நடிகை லாஸ்லியாவிற்க்கு ஆர்மி தூள் பறந்தது.

லாஸ்லியாவின் அழகான சிரிப்பும் மற்றும் அழகான முக தோற்றமே அவரது பலருக்கு பிடித்து போகவே அதனால் ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது.

நடிகை லாஸ்லியாவை ஏற்கனவே நெடுஞ்சாலை புகழ் நடிகர் ஆரியுவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பிப்ரவரி மாதம் பூஜை போடப்பட்டது.

அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

மேலும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல் முறையாக நடிக்கும் தமிழ் திரைப்படமான பிரெண்ட்ஷிப் திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

அடுத்ததாக ஐநூறு திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படத்தை தயாரித்து பெரும் வெற்றி கண்ட தயாரிப்பு நிறுவனம் ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி அதனை தொடர்ந்து தற்போது ஜிவி பிரகாஷ் குமார் நடித்து வரும் பேச்சிலர் திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

மேலும் அசோக்செல்வன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படத்தை வெளியிட்டு வெற்றி கண்டுள்ளனர் ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜி எம் ராஜ சரவணன் இயக்கத்தில் கே பூர்ணேஷ் நடிக்கும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் தற்போது நடிகை லாஸ்லியா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நடிகை லாஸ்லியா நடித்திருக்கும் ஒரு படம் கூட இன்னும் வெளிவராத இந்த நிலையில் அவர் அடுத்தடுத்து திரைப் படங்களில் ஒப்பந்தம் ஆவது அவருடைய ஆர்மி ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் உற்சாகமாக இருக்கிறது.