ஆண்கள் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள் என்றார். அமலா பால்
சர்ச்சையைக் கிளப்பி வரும் ஆடை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு நடிகை அமலாபால் பேசியதாவது
இப்படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நீண்ட பயணம் அழகிய பயணமாக இருந்தது. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படம் படம் அவள் தியரிகியாகவோ, பாதிக்கப்பட்ட பெண்ணாகவோ அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறான் என்ற கருத்தில் உடன்பாடில்லாமல் படம் நடிப்பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் ஆடை படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம்.
ஒரு காட்சியில் நடிக்கும்போது நீங்கள் யாரோ போல நடிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று கூறினார்.
பல பேருக்கு தெரியாது ரத்னகுமாருக்கு ‘ஆடை’ படம் தான் முதல் படம் என்று. அவர் பன்முக திறமை வாய்ந்தவர்.
ரம்யா இனிமேல் தொகுப்பாளினி இல்லை. சினிமாத் துறைக்கு மற்றுமொரு நடிகை கிடைத்துவிட்டார். விவேக் படத்திலும் நிஜத்திலும் எனக்கு சகோதரர் மாதிரி தான்.
‘ஊறுகாய்‘ குழுவினரின் பணி சிறப்பாக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் நான் நினைத்தேன், எனக்கு பாதுகாப்பு இருக்குமா என்று. ஏனென்றால், ஒளிப்பதிவாளர்களையும் சேர்த்து 15 பேர் இருந்தார்கள். ஆனால் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள் என்றார்.