ஆன்லைன் ஷாப்பிங்.; நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி விளம்பரத்திற்கு எதிர்ப்பு.?

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

இதனிடையில் விளம்பர படங்களிலும் தலை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் ஒரு நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக தோன்றியுள்ளார்.

சினிமாவிலும் நிஜத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படி செய்யலாமா?

உள்ளூர் வியாபாரிகளை அழிக்க வரும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆதரவாக செயல்படலாமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

என்ன செய்ய போகிறார்? மக்கள் செல்வன் விஜய்சேதுபதி