‘ஆர்.கே.நகர்’ படம் குறித்து இயக்குநர் சரவணராஜன் தகவல்

வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கியுள்ள ‘ஆர்.கே.நகர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த படம் குறித்து இயக்குநர் சரவணராஜன் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் மக்களிடம் தலைப்பு உடனே ரீச் ஆக வேண்டும் என்பதற்காக இந்த தலைப்பு வைக்கப்பட்டதாகவும், மற்றபடி இந்த படத்தில் ஓரிரு அரசியல் நையாண்டிகள் காட்சிகள் இருக்குமே தவிர, இந்த படம் ஒரு அரசியல் படம் இல்லை என்றும் சரவணராஜன் தெரிவித்தார். இந்த படத்தில் வைபவ், சனா அல்தாப், இனிகோ, பிரபாகர் பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.