ஆறடி – திரை விமர்சனம்

நடிப்பு – சாப்ளின் பாலு  விஜயராஜ்.தீபிகா ரங்கராஜ்
மற்றும் பலர்.

தயாரிப்பு – ஸ்ரீ சிவ குடும்பம் ஃபிலிம்ஸ்.

இயக்கம்– சந்தோஷ்குமார்.

இசை – அபேஜோஜோ.

மக்கள் தொடர்பு – விஜயமுரளி

வெளியான தேதி – 26 ஜுலை 2019

ரேட்டிங் – 2.5/5

பெற்ற தாய் இல்லாத குடும்பத்தில் தனது மூன்று பிள்ளைகளை வளர்த்து வருகிறார் சாப்ளின் பாலு. இவர் மனித உடல்களை புதைக்கும், எரிக்கும் வெட்டியான் தொழில் செய்து வருகிறார்.

கதாநாயகி தீபிகாவின் தந்தை சாப்ளின் பாலு. கிராமத்தில் வெட்டியான் வேலை செய்து வருகிறார்  . இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகனும். இருக்கிறார்கள் தாய் இல்லாத காரணத்தால்
தனது குழந்தைகளுக்காக, தாயில்லாத குறையை போக்க சாப்ளின் பாலு இரண்டாம் திருமணம் செய்ய நினைக்கும் போது, தனது தம்பி, தங்கைகளை தானே வளர்த்து கொள்கிறேன் தனது தம்பி தங்கைக்காக திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார் கதாநாயகி தீபிகா.

கதாநாயகி தீபிகா தன் தம்பியையும் தங்கையையும் தாயைப்போல பார்த்துக் கொள்கிறார். திருமணம் வயதாகியும் தனது தங்கை தம்பிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்பது உறுதியாக உள்ளார்.

ஒருகட்டத்தில் நாயகியின் தம்பி பெரியவனாகி தனது தந்தைக்கு உதவியாக வெட்டியான் வேலை செய்து தன் அக்காவை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உறுதியுடன் செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில்
மின்சார விபத்தில். தீபிகாவின் தம்பி இறந்துவிடுகிறான். தந்தையின் மின்சாரம் தாக்கி ஒரு கையும் காலும் செயலற்று போக, அவர் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்
குடும்ப பாரம் முழுவதும் கதாநாயகி தீபிகா மீது விழுகிறது. அப்பா செய்த தொழிலான வெட்டியான் தொழிலை ஒரு பெண்ணாக இருந்து செய்ய தொடங்குகிறார் கதாநாயகி தீபிகா.

படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா மீது தான் மொத்த கதையும் பயணிக்கிறது. ஒரு பெண்ணாக வெட்டியான் தொழில் செய்து, தனது குடும்பத்தை நடத்தும் நிகழ்வை வாழ்வியலாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். எந்த வித முக அலங்காரம் இல்லாமல், இயற்கையான அழகில் நம்மை பரவசப்படுத்துகிறார்.

இதனால் வேறு வழியின்றி தனது தங்கையின் உதவியுடன் வெட்டியாள் வேலையை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார் கதாநாயகி தீபிகா. இதனிடயே அப்பகுதியில் வசிக்கும் பத்திரிகையாளராக வரும் கதாநாயகன் விஜயராஜ்க்கும்   கதாநாயகி தீபிகா மீது காதல் ஏற்பட, கதாநாயகியையே சுற்றி வரும் கதாநாயகன் சின்சியராக காதலித்து வருகிறார். இறுதியில் நாயகிக்கு அவர் மீது காதல் வந்ததா? தனது குடும்ப சூழ்நிலையை மீறி நாயகனுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை

சேலத்தில் வெட்டியாள் வேலை பார்க்கும் பெண்ணின் வாழ்க்கை தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார் தீபிகா. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சுடுகாட்டில் தான் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஹீரோவாக நடித்துள்ள விஜயராஜ் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் நேர்த்தியாக நடித்துள்ளார். 

தீபிகாவின் தங்கையாக நடித்திருந்த ஜீவிதாவும் கதையின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். பட படவென பட்டாசு போல் பேசும் அவரது சிறிது மழலை கொஞ்சும் குரல் அழகுதான். செண்டிமெண்ட் காட்சிகளிலும் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார்.

கமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த சாப்ளின் பாலு, இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்.

இதுவரை யாரும் தேர்ந்தெடுக்காத ஒரு கதையை தேர்ந்தெடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தின் வசனங்கள் படத்திற்கு வலுவூட்டி இருக்கிறது. நாயகியின் தங்கை, தந்தை, தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கதையின் மூலக்கரு நன்றாக இருந்தாலும்,

அதை கொண்டு சென்ற விதத்தில் சற்று சறுகியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ். மிக மெதுவாக நகரும் கதையால், கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது. வசனங்கள் படத்திற்கு வலுவூட்டி இருக்கிறது. கேமரா ஒர்க் மியூசிக் பரவாயில்லை. 

முதல் பாதியில் இருந்த ஒரு உயிரோட்டமான ஒளிப்பதிவு, இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘ஆறடி’ பெண்ணின் ‘தைரியத்தை கொண்டாடாலாம்
.