“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்
மிக வித்தியாசமான இந்தக்கதை களத்தில் பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது. சமீபத்தில் வெளியான கோமாளி படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தெறிக்கவிட்ட ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். நெடுநல்வாடை படத்தில் கிராமத்தின் அழகை துளியும் குறையாமல் தன் கேமராவிற்குள் கொண்டு வந்த வினோத் ராமசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ராட்சசனில் தன் இமலாய உழைப்பைக் கொடுத்த எடிட்டர் ஷான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். மாஸான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பீட்டர் கெய்ன் ஸ்டண்ட் பொறுப்பை கவனிக்க, ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார்.
படத்தில் பங்குபெறும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படம் தாங்கி நிற்கும் கதையம்சம் அனைத்துமே ஈர்க்கக்கூடியளவில் இருக்கும் ஆலம்பனா படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று மிகப்பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது.
பூஜையில் ஹீரோ வைபவ், நாயகி பார்வதிநாயர், இயக்குநர் பார்.கே விஜய் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார், முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களின் இயக்குநர் ராம்குமார், குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களின் இயக்குநர் கல்யாண் பலூன் படத்தின் இயக்குநர் சினிஸ், டோரா படத்தின் இயக்குநர் தாஸ்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related posts:









