இசைஞானிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் விஞ்ஞான் பல்கலைக்கழகத்தின் 7வது ஆண்டு பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா , அப்போலோ மருத்துவமனையின் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் கோபால கிருஷ்ண கோகலே, குளோபல் ஹெட் டெக்னாலஜி பிஸ்னஸ் அமைப்பின் மூத்த துணைத் தலைவர் ராஜண்ணா ஆகிய மூவருக்கும் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது.