இசைஞானி இளையராஜாவின் இசை விழா மக்களுக்கு இம்சை விழாவாக மாறியது.?

 இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்த இசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

அதனை முன்னிட்டு அவரின் இசை நிகழ்ச்சி மற்றும் பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் சங்கம் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த விழா மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி பாலசுப்ரமணியன் மற்றும் யேசுதாஸ் அங்கு மேடைக்கு சரியான நேரத்திற்கு அவர்களால் வரமுடியவில்லை. அனைவரும் வரவே 8 மணி ஆனது. 8.30 மணி போல் நடிகர் கமல்ஹாசன் வந்தார்.

இளையராஜா 7.45 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தார் . இதனால் அனைத்து ரசிகர்களும்  பொறுமை இழந்தனர்.

மேலும் நிகழ்ச்சி தொடங்கும்போதே வாட்டர் பாட்டில்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு வகைகள் விற்பவர்கள் கூட தண்ணீர் பாட்டில் வைத்திருக்கவில்லை.

இதனால் கூல் ட்ரிங்ஸ் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. 2 லிட்டர் 7அப் கூல் ட்ரிங் ரூ. 500க்கு வாட்டர் பாட்டில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் மக்கள் பலரும் கோபம் அடைந்தனர்.

தண்ணீர் இல்லை. குழந்தைகளுக்கு என்ன கொடுப்பது? எதையாவது வாங்க கொடுக்க வேண்டும் என மக்கள் வாங்க ஆரம்பித்தனர்.

மேலும் காவல் துறையினரும் போதுமான அளவுக்கு இல்லை. ரூ. 1000 டிக்கெட் வாங்கியவர்கள் ரூ. 5000 சீட்களில் அமர்ந்தனர். இதனால் 5000 ரூபாய் டிக்கெட் வாங்கிய அவர்களுக்கு உட்கார சேர்கள் கூட இல்லாமல் போனது.

மேலும் பலரும் நிகழ்ச்சி நின்றுகொண்டே பார்த்தனர் . இதனால் மக்களுக்கு இடையே கூச்சல்    குழப்பம் ஏற்ப்பட்டது.

மேலும் நிகழ்ச்சி தொடங்கி 2 மணி நேரத்திற்கு மெலோடி பாடல்கள் மற்றும் சோக பாடல்கள் மட்டுமே பாடப்பட்டது. இதனால் 10 மணிக்கே மக்கள் நிறைய பேர் கலைந்து சென்றனர்.

ஆக.. மொத்தத்தில் இசையை கேட்க வந்தவர்களுக்கு மக்களுக்கு இந்த  இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இம்சை நிகழ்ச்சியாக மாறியது.

இதே விடியோ

  1. twitter_20190603_093135