இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு தடை ⁉

இசை ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளவர் இசைஞானி இளையராஜா. சமீபகாலமாக இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில்லை. இருப்பினும் இவரது இசை நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு தடைகோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குளத்தை ஆக்கிரமித்து இசை நிகழ்ச்சி நடத்துவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.