இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல நாட்டுப்புற பாடகர்.
.பிரபல நாட்டுப்புற இசை கலைஞர் அந்தோணி தாஸ். மேடை கச்சேரிகள், கல்யாண வீடுகளில் பாடிக்கொண்டிருந்த இவர், ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் இடம்பெற்ற “திண்டுக்கலு திண்டுக்கல்லு” என்ற பாடல் மூலம் திரைத்துறையில் பாடகராக அறிமுகம் ஆனார்.
இதுவரை இவர் சுமார் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகும் ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்திற்கு அந்தோணி தாஸ் இசையமைக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.











