இணையத்தில் வைரலாகும் விஜய்யின் ‘பிகில்’ ஐ.டி கார்டு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இதில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

இந்நிலையில், படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஐடி கார்டு இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல், தலைமை பயிற்சியாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது