இணைய தொடரில் களமிறங்கும் பிரபல நடிகை
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் திருமணம் ஆன பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஓ பேபி’ திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் அடுத்ததாக இணையதள தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இணையதள தொடர்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.