இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் சிலம்பரசன் டி.ஆரின் மாஸான பேச்சு !!

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் சிலம்பரசன் டி.ஆரின் மாஸான பேச்சு !!

சென்னை 02 ஜூன் 2024 இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை 28 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.

இந்த இந்தியன் இரண்டாம் பாகத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

இந்தியன் 2′ திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இந்தியன் 2 திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில்
மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் பல தமிழ் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், சிலம்பரசன் டி ஆர் மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

இசைவெளியீட்டு விழாவில் சிலம்பரசன் டி ஆர் உலகநாயகன்”கமல்ஹாசன் சார் தான் என்னோட ஸ்கிரீன் குரு, அவரோட தக் லைஃப் திரைப்படத்தில் வேலை செய்வது ரொம்ப அதிர்ஷடமாக நான் பாக்குறேன்,

நான் இந்தியன் 1 ஓட மிகப் பெரிய ரசிகன், இந்திய 2, இந்தியன் 3 அப்பறம் கேம் சேஞ்சர் திரைப்படம் பன்ற ஷங்கர் சாருக்கு ஹாட்ஸ் ஆஃப்” என்று கூறினார்.

பின் ரசிகர்களிடம் “மக்கள் எல்லாரும் என்னைய வெயிட் குறச்சிட்டாரு , டிரான்ஸ்ஃபார்ம் ஆயிட்டாரு எல்லாம் சொல்றாங்க ஆனா அதுக்கும் மேல இது ஆன்மிகம் சார்ந்த விஷயம், நம்ம கூட இருக்கறவங்க எல்லாரும் ஒரு நாள் நம்மல விட்டுட்டு போயிடுவாங்க, நம்ம முடி கூட கொஞ்ச நாளுல கொட்டிடும், ஆனா எப்பொழுதும் நம்ம கூட இருக்க ஒரே விஷயம் நம்ம உடம்புதான் அத நம்ம நல்லா பாத்துகணும்” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சிலம்பரசன் பி ஆர் பேசியதாவது…
,
‘தக் லைப்’ படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன்.

அடுத்து, ‘எஸ்.டி.ஆர்.48’ திரைப்படமும் தொடங்கும். உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஆள் யார்னா அது உண்மையை வெளிப்படையாக பேசுகிறவர்கள்தான்.

நானும் அதில் ஒருவன். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன்.

சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது.

ஆனால், ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான்.

பின் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ரெட் கார்டெல்லாம் தரவில்லை,

அது எனக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் ஒரு சிறிய பிரச்சனை அதை நாங்கள் இப்பொழுது சரி ஆக்கிவிட்டோம்’, என்றார்.