இந்தியர்களுக்காக கொரோனா வைரஸ் நோய் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்.

கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வரும் நிலையில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் இந்தியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் மிக அதிகமாக பரவி வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு பலர் பலியாகியுள்ளனர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் அவர்கள் அந்த வீடியோவில் பேசி இருப்பதாவது.

இது அனைவருக்குமே கஷ்டமான காலம் என்பது எனக்கும் தெரியும் எல்லோருக்கும் கொரோனா வைரஸ் நோய் பிரச்சினையை எதிர் கொண்டு இருக்கிறோம்.

கொரோனா வைரஸ் நோய் ஆபத்தானது இந்த நேரத்தில் அனைவரும் வீட்டிலிருந்து கொரோனா வைரஸ் நோய்யை நாட்டை விட்டு விரட்டி அடிப்போம்.

அரசின் கட்டுபாடுகளை மதித்து நடக்க வேண்டும்.

நீங்கள் வெளியே செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டால் கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லுங்கள்.

அது உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் பாதுகாக்கும் அடிக்கடி கைகளை கழுவி வாருங்கள் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள்.

ஒளிமயமான எதிர்காலம் நமக்கு காத்திருக்கிறது ஜெய் ஹோ இவ்வாறு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் அவர்கள் பேசி உள்ளார்கள் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

https://www.facebook.com/30382852317/posts/10158319640712318/

https://www.facebook.com/30382852317/posts/10158319633262318/