இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து ‘மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு.
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கமல் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்து வருகிறார் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல். இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர்”முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாத்ராம் கோட்சே. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியனின் ஆசை. நான் நல்ல இந்தியன் என்பதை மார் தட்டி சொல்வேன். மனிதர்கள் மீது நான் நேசத்தை காட்டுகிறேன். இதனால் எங்கள் மக்கள் நீதி மையத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது” என்று பேசியுள்ளார். இவருடைய பேச்சு தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இருவரும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், அரவக்குறிச்சி தொகுதிகளில் இன்று மேற்கொள்ளப்படவிருந்த தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக
மக்கள் நீதி மய்யம்
தகவல் தெரிவித்துள்ளது