இந்தியாவில் 100 கோடி வசூலில் இணைந்த தி லயன் கிங்… சாதனை படைத்த 4-வது ஹாலிவுட் படம்!

இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் செய்த 4-வது ஹாலிவுட் படம் என்ற சாதனை படைத்துள்ளது தி லயன் கிங் திரைப்படம்

தி லயன் கிங் திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

1994-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கார்ட்டூன் தொடரான ‘தி லயன் கிங்’ திரைப்படமாக 3டி அனிமேஷனில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் தமிழில் அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

தி லயன் கிங் திரைப்படத்தை கார்ட்டூன் தொடராக ரசித்தவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு 3டி வடிவில் திரைப்படமாக பார்க்க ஆசைப்படுவதால் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இப்படம் இந்தியா முழுவதும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் செய்த 4-வது ஹாலிவுட் படம் என்ற சாதனை படைத்துள்ளது. முதல் வாரத்தில் 81 கோடியும், இரண்டாவது வாரத்தில் 32 கோடியும் வசூல் செய்துள்ளது.முன்னதாக தி ஜங்குள் புக், அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசுல் செய்துள்ளது