இந்தியில் பேச முடியாது – செய்தியாளர்களிடம் பிரபல நடிகை*

கோவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று பிரபல நடிகை டாப்ஸி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் ஆங்கிலத்தில் பதில் கூறி வந்த நிலையில், ஒரு நிருபர் குறிக்கிட்டு ’நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை எனவே நீங்கள் ஹிந்தியில் தான் பேச வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அதற்கு “நான் பாலிவுட் நடிகை மட்டுமல்ல, தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து உள்ளேன். எனவே நான் ஒரு இந்திய நடிகை. அனைவருக்கும் தெரிந்த மொழியில் பேச வேண்டும் என்பதற்காகத்தான் ஆங்கிலத்தில் பேசுகிறேன்” என பதிலளித்தார்.